Monday, 18 July 2016

அஜித் பட சர்ச்சைக்கு அமிதாப் பச்சன் வைத்த முற்று புள்ளி


அஜித் படத்தின் கால்ஷிட் எப்போது கிடைக்கும் என பலரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார்கள். அஜித் நடித்த உல்லாசம் படத்தை தயாரித்தவர் அமிதாப் பச்சன் தான்.இதை தொடர்ந்து மீண்டும் இவர் அஜித் படத்தை தயாரிக்க போகிறார் என்ற செய்தி உலா வந்தது.தற்போது தான் அஜித் படத்தை தயாரிக்கவில்லை என்ற தகவலை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி மீது உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்


தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள் தற்போது எல்லை மீறி போகின்றது. முதலில் இதற்கு ஒரு சென்ஸார் போட வேண்டும் என்று பல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.தற்போது சில ரியாலிட்டி ஷோவையே கலை நிகழ்ச்சி போல் நடத்துகின்றனர், அப்படி விஜய் டிவியில் நடத்திய கலக்கப்போவது யாரு பைனலில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.இதில் இவரை மிகவும் புகழ்ந்தனர், இவை எந்த அளவிற்கு சென்றது என்றால், ரசிகர்களே வெறுப்படையும் வரை புகழ்ந்தனர், இந்நிகழ்ச்சியை பார்த்த பலருக்கும் இது வெறுப்படைய வைத்தது. உங்கள் வீட்டு பிள்ளை தான் அதற்காக, ஒரு எல்லை இல்லையா....! என்பதே ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்.

சிம்புவிற்கு திருமணம்?


சிம்பு திரையுலகில் நயன்தாரா மற்றும் ஹன்சிகாவை காதலித்து பின் பிரிந்தவர். இவருக்கு எப்போது திருமணம் என்பது தான் பலரும் கேட்கும் கேள்வி.இதே கேள்வியை இவருடைய தந்தை டி.ஆரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியை கேட்க ‘சிம்புவை திருமணம் செய்துக்கொள்ள பல பெண்கள் காத்திருக்கின்றனர்.நாங்களும் ஜாதகம் பார்த்து வருகிறோம், காதல் திருமணம் என்றாலும் சந்தோஷம் தான், விரைவில் நல்ல செய்தியை அறிவிப்போம்’ என கூறியுள்ளார்.

கஷ்டத்தில் இருக்கும் தயாரிப்பாளருக்கு தளபதி கொடுத்த வாக்கு?


இளைய தளபதி விஜய் என்றாலே மினிமம் கேரண்டி தான். படம் வெற்றி, தோல்வி தாண்டி போட்ட பணத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வராது.இந்நிலையில் இவர் நடித்த வேலாயுதம் படத்தை தயாரித்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், அந்த படம் சுமாராக வசூல் தந்தாலும், அதன் பிறகு அவர் தயாரித்த பல படங்கள் தோல்வி தானாம்.ஆனால், வேலாயுதத்திற்கு பிறகு உங்கள் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறேன் என விஜய் வாக்கு கொடுத்துள்ளாராம், தற்போது கஷ்டத்தில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு விஜய் கால்ஷிட் கொடுத்தால், இதுவே அவர் செய்யும் பெரும் உதவி என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

ராஜமௌலியை கோபத்திற்கு ஆளாக்கிய அனுஷ்கா


அனுஷ்கா இயக்குனரின் நடிகை என்று கூறலாம். ஒரு படத்திற்காக உடல் எடையை ஏற்றி, இறக்கி ஒரு ஹீரோக்கு நிகராக நடிப்பவர்.ஆனால், தற்போது இதுவே இவருக்கு பெரும் தலைவலியாகிவிட்டது, இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார்.இதனால் தற்போது பாகுபலி-2விற்கு பெரும் பிரச்சனையாக அமைந்துள்ளது, ராஜமௌலி உடல் எடையை குறைக்க சொல்கிறாராம்.அனுஷ்காவால் முன்பு போல் ஸ்லிம்மாக வர முடியவில்லை, இதைக்கண்ட ராஜமௌலி ‘நீங்கள் என்ன செய்வீர்கள் என்று தெரியாது, உடல் எடையை குறையுங்கள்’ என கோபமாக கூறிவிட்டாராம்.

கபாலி மும்பை ப்ரோமோஷன் புகைப்படம் உள்ளே


கபாலி பீவர் தமிழகத்தை தாண்டி பாலிவுட் வரை சென்றுவிட்டது. இப்படத்தை வட இந்தியாவில் ரூ 15 கோடிகளுக்கு மேல் கொடுத்து வாங்கியுள்ளனர்.இதனால், தற்போது கபாலிக்கு பிரமாண்ட ப்ரோமோஷன் செய்து வருகின்றனர், பேருந்து முழுவதும் ரஜினி போஸ்டர், பெயிண்டிங் என ரெடியாகியுள்ளது.இந்த பேருந்து மும்பையில் வலம் வர, இப்படம் எல்லோரிடமும் பெரிய ரீச் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


இணையத்தில் லீக் ஆனதா கபாலி?


படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன் இணையத்தில் வெளியாவது சமீப காலத்தில் அதிகரித்துவிட்டது.Udta Punjab, சுல்தான், Great Grand Masti போன்ற ஹிந்தி படங்களின் சென்சார் காபி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.தற்போது ரஜினிகாந்த் நடித்து, வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் கபாலி திரைப்படமும் லீக் ஆகியுள்ளதாக தகவல்.அதை இணையம் முழுவதும் பரவாமல் தடுக்க தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் அதை யாரும் டவுன்லோடு செய்து பார்க்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.