Friday, 22 April 2016

அஜித் எங்கே அப்படி சொன்னார், சொல்லுங்க பார்ப்போம்- உண்மையை உடைத்த எஸ்.வி.சேகர்


திரைப்பட நடிகர், நாடக நடிகர் என பண்முகம் கொண்டவர் எஸ்.வி.சேகர். இவர் சமீபத்தில் அஜித் மற்றும் நடிகர் சங்கத்திற்குமான வதந்தி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதில் 'அஜித் எங்காவது எந்த பேட்டியிலாவது சொன்னாரா, மக்கள் பணத்தை வாங்காதீர்கள் என்று, அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ள மாட்டார், அதே நேரம் நான் என் பங்கிற்கான பணத்தை தருகிறேன் என முதல் ஆளாக கொடுத்து விடுவார்.

அவர் யாரை பற்றியும் தேவையில்லாமல் பேச மாட்டார், ஒருவரை பற்றி ஏதும் கருத்து கூறுவதாக இருந்தால் வெளிப்படையாக கூறிவிடுவார், நீங்களாகவே எதையாவது கூறி பிரச்சனையை உண்டு செய்ய வேண்டாம் 'என அதிரடியாக பேசியுள்ளார்.


EmoticonEmoticon