கமல் நடிப்பில் வெளிவந்த 'பம்மல் கே.சம்பந்தம்' படத்தை இயக்கியவர் இயக்குனர் மௌலி. மேலும் கமல் தயாரிப்பில் வெளிவந்த 'நளதமயந்தி' படத்தையும் இயக்கியிருந்தார். இக்கூட்டணி தற்போது மீண்டும் இணையவிருக்கிறது.
இந்த புதிய படத்திற்கு கதை, திரைக்கதையை மௌலி எழுத, 'தூங்காவனம்' மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜேஷ் எம்.செல்வா இயக்க இருக்கிறார். மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் படத்திற்கு வசனம் எழுத இருக்கிறார் கிரேசி மோகன். இந்த புதிய படத்திற்கு 'பரமபதம்' என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
கமல் நடித்த 'பம்மல் கே.சம்பந்தம்' படத்தைப் போன்று இப்படமும் முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்க இருக்கிறார்கள். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

EmoticonEmoticon