Saturday, 5 March 2016

24 டீசரில் மறைந்திருக்கும் ரகசியங்கள்- சமூக வலைத்தளங்களில் இவை தான் வைரல்

Tags

ஒரு டீசரிலேயே கதையை கண்டுப்பிடித்துவிடும் அளவிற்கு ரசிகர்கள் தங்களை தயார்ப்படுத்தி வைத்துள்ளனர். அந்த வகையில் நேற்று வெளிவந்தசூர்யாவின் 24 டீசர் இணையத்தளத்தை கலக்கி வருகின்றது.
இப்படம் டைம் ட்ராவலர் கதையை கொண்டதாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. அதிலும் இயக்குனர் பல இடங்களில் மிக நுணுக்கமாக ஒரு சில காட்சிகளை கையாண்டுள்ளார்.
ஆனால், ரசிகர்கள் விடுவார்களா? அதற்குள் பல ருசிகர தகவல்களை டீசரில் இருந்து கண்டுப்பிடித்து விட்டனர். அதாவது ஒரு காட்சியில் ட்ரையினில் உள்ள நம்பர் கண்ணாடி வழியாக பார்ப்பது போல் தலைகீழாக தெரிகின்றது.
அது என்னவென்றால் டைம் ட்ராவலர் செய்து வந்தால் நாம் ஒரு கண்ணாடி வழியாக பார்ப்பது போல் தான் காட்சிகள் இருக்கும் என்பதை இயக்குனர் காட்டியிருப்பதாக ரசிகர்கள் கண்டுப்பிடித்து விட்டனர். தற்போது இந்த செய்தி தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்.


EmoticonEmoticon