Friday, 26 February 2016

இது வெறும் அஜித், விஜய் படம் தான் விசாரணையை வெளுத்தெடுத்த சாரு

Tags

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளிவந்தவெற்றிமாறனின் விசாரணை படம் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. இப்படம் குறித்து சமீபத்தில் திரைப்பிரபலங்கள் எழுத்தாளர்கள், ரசிகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடந்தது.

இதில் பேசிய எழுத்தாளர் சாருநிவேதிதா 'விசாரணை படத்தை நான் ஒரு மாற்று சினிமாவாக பார்க்க வில்லை, பார்க்கவும் முடியவில்லை. இப்படத்தில் இருக்கும் வன்முறை பல படங்களில் பார்த்தது என்று சொன்னார்கள். போலீஸ் எங்கோ தனியாக இல்லை. நீங்களும் நானும் தான் போலீஸ். போலீஸ் நம் தலையில் இருக்கிறான்.

டெல்லியில் நிர்பயா வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரையும் நாம் தனியாக பார்த்தால் இப்படத்தில் வரும் மொட்டை போலீஸ் அடிப்பதை போல தான் அடிப்போம். வன்முறை என்பது நம் தலைக்குள் தான் இருக்கின்றது.

மேலும், இப்படத்தின் ஹீரோ அடிக்க அடிக்க எழுந்து நிற்கின்றான், இது ஏதோ எம்.ஜி.ஆர், விஜய், அஜித் படங்கள் போல தான் நான் பார்த்தேன் 'என கூறியுள்ளார்.


EmoticonEmoticon